சென்னை: அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வரை தனது பெயரை அரசியல் களத்தில் பயன்படுத்த விரும்பாத விஜய், தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தனது மன்ற நிர்வாகிகள் களமிறங்க இசைவு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் மன்ற கொடியையும் பெயரையும் பயன்படுத்த தடை இல்லை என்றும் விஜய் மக்கள் மன்றத்தின் சார்பில் நிர்வாகி களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்க மாநிலப் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுக்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

