திருச்செந்தூர்: வாடிக்கையாளர்கள் தங்களது நகையை அடகு வைக்கா மலேயே, நகைக்கடன் என்ற பெய ரில் கூட்டுறவு வங்கி ஒன்றில் மாபெரும் மோசடி நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச் செந்தூரை அடுத்துள்ள குரும்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது.
இந்த வங்கியில் இரண்டாவது நாளாக நேற்று நடத்தப்பட்ட விசார ணையில், ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டிருப்பது முதல் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதனையடுத்து, இந்த வங்கி யின் தலைவர் முருகேசபாண்டியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
வங்கியின் செயலாளர் தேவராஜ், துணைச் செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய், வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ஆழ்வார் குமார் ஆகியோர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகக் கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுன் வரையிலான நகை களை அடமானம் வைத்திருந்தால் அந்தக் கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இதையடுத்து, அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பயனாளிகளின் பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் வங்கி உயர்அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில், குரும்பூர் வங்கியிலும் ஆய்வு நடந்தது.
அப்போது, வங்கியில் நகையே இல்லாமல் போலியான பையை வைத்து, அதில் நகை இருப்பதுபோல கூறி, கடன் வாங்கப்பட்டு இருப்பதை அறிந்த அதிகாரிகள் ேபரதிர்ச்சி அடைந்தனர்.
அத்துடன், வங்கியில் 548 பைகளில் வைக்கப்பட்டிருந்த நகை களில் 261 பைகளில் இருந்த நகைகள் மாயமானதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரிகளின் விசாரணையில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் ரூ.3 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 மோசடி செய்திருப்பது அம்பலமானது.
இதேபோல், வாடிக்கையாளர்க ளின் வைப்புத் தொகையை அவர் களது கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான 'பாண்ட்' பத்திரம் கொடுத்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தொடர்ச்சியாக வங்கியில் லட்சக்கணக்கில் பணத்தை வைப்புத்தொகையாக செலுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இதுகுறித்து விசாரணைக் குழுவினரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
நகைக்கடன், விவசாயக் கடன், தனிநபர் கடன் என 500க்கும் மேற்பட்டோருக்கு கடனுதவி வழங்கப்பட்டு, பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.

