கிராமத் தலைவர் பதவிக்கு மாமியார், மருமகள் போட்டி
வாலாஜாபாத்: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காடு என்ற கிராமத்தின் தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியாரும் மருமகளும் போட்டியிடு கின்றனர். இருவரும் ஒற்றுமையாக வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்து மனுத் தாக்கல் செய்ததைக் கண்டு மக்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
அரிசியுடன் கவிழ்ந்த லாரி
வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் அரிசி ஏற்றி வந்த லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து ஒன்று மீது மோதியதில் நிலை தடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. நேற்றுக் காலை நடந்த இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ராஜேந்திரன், 60, அவரது உதவியாளர் கனகராஜ், 40, ஆகிய இருவரும் காயமடைந்தனர். தனியார் ஆம்னி பேருந்தில் பயணித்த 13 பேரும் காயமின்றி உயிர்தப்பினர். விசாரணை தொடர்கிறது. படம்: ஊடகம்
முருகப் பெருமானுக்கு 146 அடி உயர பிரம்மாண்ட சிலை
சேலம்: சேலம் மாவட்டம், புத்திரகவுண்டன்பாளை யத்தில் உலகிலேயே உயரமான 146 அடி முருகன் சிலை (படம்) அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முடிவுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தச் சிலையை, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் வடிவமைத்து வருகிறார்கள்.
கடந்த ஐந்தாண்டுகளாக தினமும் 25 சிலை கலை ஞர்கள் சிலையை வடிவ மைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

