உச்ச நீதிமன்ற உத்தரவால் முன்னாள் அமைச்சர் நிம்மதி

உச்ச நீதிமன்ற உத்தரவால் முன்னாள் அமைச்சர் நிம்மதி

1 mins read
c37c18a2-3182-48e0-80f6-090158e946d5
-

புதுடெல்லி: மது­ரை­யைச் சேர்ந்த மகேந்­தி­ரன் என்­ப­வர் தமிழ்­நாடு லஞ்ச ஒழிப்­புத் துறை­யில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், ராஜேந்­திர பாலாஜி முன்­னாள் அமைச்­ச­ராக இருந்த போதும், நக­ராட்­சித் தலை­வ­ராக இருந்­த­போ­தும் வரு­மா­னத்திற்கு அதி­க­மாக ரூ.7 கோடி அள­வுக்கு சொத்து சேர்த்­த­தாக புகார் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இது­கு­றித்து லஞ்ச ஒழிப்­புத்­துறை முறை­யாக நட வடிக்கை எது­வும் எடுக்­கா­ததால் மகேந்­தி­ரன் சென்னை உயர் நீதி­மன்­றத்தை நாடி­னார்.

இந்த வழக்­கில் சென்னை உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் சத்­தியநாரா­ய­ணன், ஹேம­லதா ஆகி­யோர் இரு­வே­று­பட்ட தீர்ப்­பு­களை வழங்­கி­னர்.

அதா­வது, "ராஜேந்­திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்­புத்­துறை வழக்கு பதிவு செய்து நட­வ­டிக்கை எடுக்­க­லாம்," என்று சங்­க­ர­நா­ரா­ய­ணன் தீர்ப்­ப­ளிக்க, "இவ்­வி­வ­கா­ரத்­தில் வழக்­குப்­ப­திவு செய்து எந்­தப் பய­னும் இல்லை," என ஹேம­லதா தீர்ப்­ப­ளித்­தார்.

இத­னால் இவ்வழக்கு தலைமை நீதி­ப­தி­யின் மூலம் மூன்­றா­வது நீதி­ப­தி­யான நிர்­மல்­கு­மா­ரி­டம் மாற்­றப்­பட்­டது.

இந்­நி­லை­யில், மூன்­றா­வது நீதி­பதிக்கு வழக்கு மாற்­றப்­பட்­டதை எதிர்த்து முன்­னாள் அமைச்­சர் ராஜேந்­திர பாலாஜி உச்ச நீதிமன்­றத்தை நாடி­னார்.

அவ­ரது மனு மீதான விசா­ரணை உச்­ச­ நீ­தி­மன்­றத்­தில் விசா­ர­ணைக்கு வந்­த­போது, ராஜேந்­திர பாலா­ஜிக்கு எதி­ரான சொத்­துக்­குவிப்பு வழக்­கில் தீர்ப்­ப­ளிக்க சென்னை உயர் நீதி­மன்­றத்­திற்கு நீதி­ப­தி­கள் இடைக்­கா­லத் தடை விதித்தனர்.

உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் ராஜேந்திர பாலாஜி சற்று நிம்மதி அடைந்துள்ளார்.