தலையைத் துண்டித்து பெண் கொலை

தலையைத் துண்டித்து பெண் கொலை

1 mins read
d1cfb00d-8095-4cf2-94e9-427149a89589
-

திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப் பின் தலைவரான பசுபதி பாண்டியன் கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி திண்டுக்கல் அடுத்துள்ள நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டிலேயே வெட்டிக்கொலை செய்யப் பட்டார். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் இ பி. காலனியைச் சேர்ந்த நிர்மலா என்பவர் மர்ம நபர்களால் நேற்றுக் காலை வெட்டிக் கொலை செய்யப் பட்டார். மர்ம நபர்கள் அந்தப் பெண்ணின் தலையைத் துண்டித்து உள்ளனர். பின்னர் அந்த தலையை மட்டும் நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.