தடுப்பூசி ஏற்றுமதியை தள்ளிவைக்க கோரிக்கை

1 mins read
26e22bb2-9524-4a29-a689-2fe6f014cf40
-

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கொரோனாவுக்குத் தடுப்பூசி ஒன்றுதான் தீர்வாக இருந்துகொண்டிருக்கிறது. தற்போதுள்ள நிலையில் நமக்கே போதுமான அளவு தடுப்பூசி இல்லை.

"தமிழகத்தில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டது. இது இந்திய அளவில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமே 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 கோடியே 6 லட்சம் பேரில் இதுவரை 4 கோடியே 37 லட்சத்து 9 ஆயிரத்து 804 பேர்தான் தடுப்பூசி போட்டுள்ளனர்.

"இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடி. நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படுவதற்கு இன்னமும் 115 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும்.

"இந்தியாவிலும் அதை நாம் பரிசீலிக்க வேண்டும். இந்த நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வோம் என்கிற முடிவு, எந்த வகையில் சரியாக இருக்குமென்று தெரியவில்லை. தமிழக மக்களின் சார்பில் பிரதமரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தடுப்பூசிகள் ஏற்றுமதி என்பதை தள்ளிவைக்க வேண்டுகிறேன்," என்றார் சுப்பிரமணியன்.