சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மண்டல வாரியாக கொரோன பாதிப்பு, உயிரிழப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இதில் அதிபட்சமான பாதிப்புகள் தேனாம்பேட்டை மற்றும் அண்ணா நகர் மண்டலத்தில் உள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் பார்த்தால் அதிகபட்சமாக அண்ணா நகர், தேனாம்பேட்டை கோடம்பாக்கத்தில் 900க்கு மேல் உள்ளது.
சென்னையில் இதுவரை 548,097 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 98 விழுக்காட்டினர் குணம் அடைந்துவிட்டனர்.
அதாவது 537,592 பேர் குணமாகிவிட்டனர். வெறும் 1.5 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது சென்னையில் 8,450 பேர் இதுவரை கொரோனா பாதிப்பால் மாண்டுவிட்டனர்.
தற்போது சென்னையில் 0.4 விழுக்காட்டினர் 'ஆக்டிவ்' நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதாவது 2,055 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

