காண்டாமிருகத்தை வதைத்து அவற்றின் கொம்புகளை சட்டவிரோதக் கும்பல் வெட்டி விற்கும் செயல் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெறு வதுண்டு. வனத்துறையினர் அவற்றை மீட்டு வருகின்றனர். அவ்வாறு மீட்கப்பட்ட காண்டா மிருகக் கொம்புகளை அந்த மாநிலத்தின் காஸிரங்கா தேசிய பூங்கா அருகே கிடத்திய அதிகாரிகள் அவற்றை தீ வைத்து அழித்த னர். உலகக் காண்டாமிருக நாளையொட்டி அசாமில் நேற்று இச்சம்பவம் நிகழ்ந்தது.
படம்: ராய்ட்டர்ஸ்