ஏற்றுமதி: 3வது இடத்தில் தமிழகம்

ஏற்றுமதி: 3வது இடத்தில் தமிழகம்

1 mins read
e667f53f-75fe-414a-859f-da4e14c7eaf5
-

சென்னை: 'மேட் இன் இந்தியா' என்பதுபோல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற அடிப்படையில் இனி நாம் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்," என்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், "தமிழ்நாட்டிற்கான ஏற்றுமதிக் கொள்கையை வெளியிட்டதில் பெருமையடைகிறேன். மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு தலைமைச்செயலாளர் தலைமையில் விரைவில் அமைக்கப்படும். ஏற்றுமதியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அனைத்துவித ஆதரவும் தமிழக அரசு வழங்கும். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்தியா முழுவதும் பரந்துள்ளது. உலகம் நோக்கி நாம் செல்ல வேண்டும் உலகம் நம்மை நோக்கி வர வேண்டும்.

"இந்தியாவிலேயே ஏற்றுமதியில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில் ரூ.1.93 லட்சம் கோடி ஏற்று

மதியுடன் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் இருந்து வருகிறது. தொழில்துறையிலும் தமிழ்நாடு முன்னணியிலேயே இருக்கிறது.

"அகில இந்திய அளவில் தமிழகத்தின் பங்களிப்பு 8.97% என இருக்கிறது. மோட்டார் வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னிலை வகுத்து வருகிறது. ஆடை, அணிகலன் ஏற்றுமதியில் 58%, காலணி ஏற்றுமதியில் 45% பங்களிப்பு, மின்னனுச் சாதனங்களின் ஏற்றுமதியில் 25% பங்களிப்பு என்று தமிழகம் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது" என்றார்.