சென்னை: கொரோனாவால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறைவேற இனி 3 ஆண்டுகள் ஆகும். 3வது நிலவுப் பயணமும் தள்ளிப் போகிறது. விமானப் பயணம்போல விண்வெளி செல்வதற்கு வாகனங்கள் உருவாகும். செவ்வாய் கிரகத்தில் தாவரம் வளர்ப்பதற்கான மூலக்கூறுகள் ஆராயப்படும். சந்திரயான்-3 செயற்கைகோள் ஓராண்டுக்குள் அனுப்பப்படும். ஆளில்லா விண்கலம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
"நிலத்திலும் நீரிலும் வரும் எல்லைப் பிரச்சினைகள் வானிலும் வரக்கூடாது என விஞ்ஞானிகள் செயலாற்றி வருகின்றார்.
"வானில் உள்ள செயற்கைக்கோள் கழிவுகளை அகற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன," என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

