டெங்கிக் காய்ச்சல் அதிகரிப்பு; எச்சரிக்கை

டெங்கிக் காய்ச்சல் அதிகரிப்பு; எச்சரிக்கை

2 mins read
256937cd-4c74-486a-a690-c74f373eba90
-

சென்னை: தமிழ்­நாட்­டில் கடந்த ஆண்­டைக்­காட்­டி­லும் இந்த ஆண்­டில் டெங்­கிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை சற்று அதி­க­ரித்து உள்­ள­தால் பொது­மக்­கள் அதிக கவ­னத்­து­டன் இருக்­க­வேண்­டும் என்று சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­களும் மருத்­து­வர்­களும் எச்­ச­ரித்து உள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் கொவிட்-19 இரண்­டாம் அலை­யின் தாக்­கம் இன்­னும் முழு­மை­யாக ஒரு கட்­டுக்­குள் வராத நிலை­யில், டெங்கி பாதிப்­பும் சேர்ந்து­கொண்டு மக்­களை அச்­சு­றுத்தி வரு­கின்­றன.

இருப்­பி­னும், உத்­த­ரப்­ பி­ர­தே­சம் உள்­ளிட்ட வட­மா­நி­லங்­களில் இந்தப் பாதிப்பு அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில், தமி­ழ­கத்­தில் ஒரு கட்­டுக்­குள் இருப்­ப­தா­க­ பொது சுகா­தா­ரத்­துறை இயக்­கு­ந­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

எனி­னும், கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் தமி­ழ­கத்­தில் டெங்கி பாதிப்பு அதி­க­ரித்து உள்­ள­தா­க­வும் 'புதிய தலை­முறை' ஊட­கச் செய்தி கூறி­யுள்­ளது.

தமி­ழ­கத்­தில் கடந்த ஆண்டு 2,410 பேர் டெங்­கிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­னர். ஆனால், இவ்­வாண்டு ஜன­வரி முதல் செப்­டம்­பர் 20ஆம் தேதி வரை 2,657 பேர் இக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்பட்­டு உள்­ளனர்.

தற்­போது மாநி­லத்­தில் தின­மும் 25 முதல் 30 பேர் இக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

வட கிழக்கு பரு­வ­மழை அக்­டோ­பர் மாதத்­தில் தொடங்­க­வுள்ள நிலை­யில், தற்­போதே இக்காய்ச்­சல் பாதிப்பு அதி­க­ரித்து வருகிறது.

காய்ச்­சல், தலை­யின் பின்­ப­கு­தி­யில் வலி போன்ற அறி­கு­றி­கள் இருந்­தால் உடனே மருத்­து­வ­மனையை அணுகும்படி மருத்­து­வர்­கள் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

டெங்­கிக் கொசுக்­கள் தண்­ணீ­ரில் அதி­கம் பெரு­கும் என்­ப­தால் வீடுகளில் தண்­ணீர் தேங்­கா­மல் பார்த்­துக்கொள்­ளும்­ப­டி­யும் சுகா­தா­ர அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் 22,500 கொசு ஒழிப்­புப் பணி­யா­ளர்­கள் களத்­தில் இருப்­ப­தா­க­வும் டெங்கி பாதிப்பு கட்­டுக்­குள் உள்ளதா­க­வும் பொது சுகா­தா­ரத் துறை இயக்­கு­ன­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, இந்­தக் காய்ச்­சல் அதி­க­ரிப்­பைத் தடுக்க முதல்­வர் இதில் தனிக் கவ­னம் செலுத்த வும் மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும் நட­வ­டிக்கைகளை எடுக்­க­வேண்­டும் என அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.