அதிமுகவுக்குத் தாவிய பாமக நிர்வாகிகள்

அதிமுகவுக்குத் தாவிய பாமக நிர்வாகிகள்

1 mins read
fb8e1df3-5d18-468c-b645-c4e98443dd44
-

திண்டிவனம்: தமி­ழ­கத்­தில் ஒன்­பது மாவட்­டங்­க­ளுக்­கான உள்­ளாட்­சித் தேர்­தலுக்கு கட்சிகள் அைனத்தும் ஆயத்தமாகி வரும் நிலையில், பாம­க­வின் மாநில நிர்­வா­கி­கள் பல­ரும் கொத்து கொத்­தாக அதி­மு­க­வில் இணைந்து வரு­வது அக்­கட்­சி­யின் மூத்த தலை­வர்­களை கடும் அதிர்ச்­சி­யில் ஆழ்த்தி உள்ளதாகக் கூறப்­படு­கிறது.

சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அதி­மு­க­வு­டன் இணைந்து களம் கண்ட பாமக, இந்த உள்­ளாட்­சித் தேர்­த­லில் தனித்­துப் போட்­டி­யி­டப் போவ­தாக அண்மையில் அறி­வித்­தது. இந்த அறிவிப்பால் அதிமுக அதிர்ந்து போனதுடன், திமுகவின் வியூகம் வேலை செய்வதாகவும் கூறப்பட்டது.

இந்நிலை­யில்­தான் பாமகவின் மாநில நிர்­வா­கி­கள் பலரும் திண்டி ­வ­னத்­தில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்­மு­கத்தை சந்­தித்து அதி­மு­க­வில் இணைந்து­ கொண்­டுள்­ள­னர்.

அவர்கள் அனை­வ­ரும் சி.வி.சண்­மு­கத்­தி­டம் டாக்­டர் ராம­தாஸ், அன்­பு­மணி ராம­தாஸ் ஆகி­யோர் மீதான அதி­ருப்­தியைக் கொட்­டித் தீர்த்துள்ளனராம். குறிப்­பாக உள்­ளாட்­சித் தேர்­த­லில் அதி­முக கூட்­ட­ணி­யில் இருந்து வெளி­யேறி தனித்­துப் போட்டி என டாக்­டர் ராம­தாஸ் அறி­வித்­ததை பாமக நிர்­வா­கி­களில் 90% பேர் ஏற்­க­வில்லை என­வும் சி.வி.சண்­மு­கத்­தி­டம் சுட்­டிக்­காட்டி உள்ளனர்.