சென்னை: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஒரு லட்சம் தமிழக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
மாநிலத்தில் இந்த இணைப்புத் திட்டத்தைப் பெறுவதற்காக 452,777 விவசாயிகள் பதிவு செய்திருந்த னர்.
இவர்களில், முதல்கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து முதல்வர் பேசியபோது, "விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள புதிய மின் இணைப்புத் திட்டம் மகத்தானது.
"இதன்மூலம் விவசாயிகள் தங்களது உற்பத்தியைப் பெருக்கி, வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் சூழல் உள்ளது.
"புதிய மின் இணைப்பு கிடைக்கப் ெபற்றுள்ள விவசாயிகள் மின்சாரத்தை தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
"சூரிய சக்தி மூலம் மின் சாரத்தை தயாரிக்கவும் முன்னுரிமை வழங்க இருக்கிறோம். திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது.
"தமிழக மின்வாரியத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியாளர்கள் முறையாகப் பராமரிக்காமல் சீரழித்துவிட்டனர்," என்று குற்றம்சாட்டியுள்ள முதல்வர், "அதிமுக ஆட்சியில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்குத்தான் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களிலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம்.
"தற்போது தமிழகத்தில் நடந்துவரும் திமுக ஆட்சி உழவர்களுக்கானது," என்றார்.
"கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்கவில்லை. பொறுப்பேற்றேன் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அரசின் திட்டங் களை நிறைவேற்ற அமைச்சர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பணிகளைச் ெசவ்வனே செய்து வருகின்றனர். இதைவிட வேகமான ஆட்சி தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை," என்று முதல்வர் கூறியுள்ளதாக 'இந்து தமிழ் திசை' ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

