சென்னை: தமிழகக் காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும் ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் காவல்துறையின் சார்பாக பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்துச் செய்தி மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

