திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் மதுபோத்தல்களை ஆயிரக்கணக்கில் பதுக்கிவைத்து, விற்பனை செய்து வந்த திமுக பிரமுகர் இன்பராஜ் உள்ளிட்ட அறுவரை போலிசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் தனிப்படை போலிசார் நடத்திய சோதனையில், தருமத்துப்பட்டியில் உள்ள தோட்டத்து வீடு ஒன்றில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு நடத்திய சோதனை யில் 234 பெட்டிகளில் இருந்த 11,232 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அங்கு மதுபோத்தல்களை விற்பனை செய்துவந்த அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்த இன்பராஜ், 52, சிவா, 23, சகோதரர்கள் சண்முகபாண்டியன், 36, சங்கர், 34, பிரபு, 26, வினோத், 20, ஆகியோரை போலிசார் கைது செய்தனர். அனுமந்தராயன்கோட்டை ஊராட்சியின் முன்னாள் தலைவரான இன்பராஜ், தற்போது திமுக கிளைச் செயலாளராக உள்ளார்.

