'கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற முடிவு'

'கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற முடிவு'

1 mins read
4437b8cb-f824-4fa6-b6cd-00b489ab1f33
சாமி அலங்கார நகைகள். படம்: தமிழக ஊடகம். -

சென்னை: ஆலய வழிபாடுகளின் போது இறைவனுக்கு நகைகள் அணிவிக்கப்படுவது வழக்கம்.

இதுபோல் பயன்பாட்டில் இல்லா மல் இருக்கும் நகைகளை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி, அவற்றை தங்கக் கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் வைப்பு நிதியாக இருப்பு வைக்க முடிவு செய்துள்ள தாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

இதன்மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் சொன்னார்.

சென்னை நுங்­கம்­பாக்­கத்­தில் செய்­தி­யா­ளர்­களிடம் சேகர்­பாபு கூறுகையில், "கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கி, வங்கிகள், வைப்பு நிதிகள் அடிப்படையில் சேமிக்கவும் அதன் மூலம் வருமானம் ஈட்டி அதை கோவில் பணிகளுக்குச் செலவிட வும் திட்டமிட்டுள்ளோம். கோயி­லில் மொட்டை அடிப்­ப­தற்­குக் கட்­ட­ணம் இல்லை. இந்த ஆண்­டுக்­குள் 500 கோயில்­களில் திருப்­ப­ணி­கள் செய்­யப்­பட உள்ளது," என்றார்.