தம்பதி கொலை: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை

தம்பதி கொலை: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை

1 mins read
65bf13a3-633c-4da9-ba16-0dd4d4ad6ea8
-

கடலூர்: கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்துெகாண்ட கண்ணகி-முருகேசன் தம்பதிகள் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 13 பேர் குற்றவாளி கள் என்று நேற்று காலை கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெண்ணின் அண்ணன் து.மருதுபாண்டியனுக்கு சாகும்வரை தூக்குத் தண்டனை விதித்து கடலூர் எஸ்.சி., எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.உத்தமராசா தீர்ப்பு வழங்கினார். கண்ணகியின் தந்தை துரைசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனை யும் இதர 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். குப்பநத்தம் புதுகாலணி யைச் சேர்ந்த முருகேசன்- கண்ணகி தம்பதியர் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் திருமணம் செய்த நிலையில், 2003 ஜூலை 8ஆம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்டனர்.