கணவரை ஆணவக் கொலை ெசய்துவிட்டதாக பெண் புகார்

திரு­வள்­ளூர்: கலப்­புத் திரு­ம­ணம் செய்­து­கொண்ட தனது கண­வரை அவ­ரது குடும்­பத்­தி­னர் ஆண­வக் கொலை செய்­து­விட்­ட­தாக தனது கைக்­கு­ழந்­தை­யு­டன் சென்று ஒரு இளம்­பெண் காவல்­நி­லை­யத்­தில் புகார் அளித்­துள்­ளார்.

அத்­து­டன், தனக்­குத் தெரி­யா­ம­லேயே கண­வ­ரின் உடலை எரி­யூட்டி விட்­ட­தா­க­வும் இந்­தக் கொடூர சம்­ப­வத்­தில் தனக்கு நியா­யம் கிடைக்­க­வேண்­டும் என்­றும் அப்­பெண் குரல் எழுப்­பி­யுள்­ளார்.

திரு­வள்­ளூர் மாவட்­டம், அய­நெல்­லூர் கிரா­மத்­தைச் சேர்ந்த அமுல் என்­ப­வர் ஆர­ணி­யைச் சேர்ந்த கௌதம் என்­ப­வரை கடந்த 2019ல் பெற்­றோர் எதிர்ப்பை மீறி காதல் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

இந்­நி­லை­யில், ஆவூ­ரில் அமு­லும் கௌத­மும் குடி பெயர்ந்­துள்­ள­னர். கடந்த மாதம் அமு­லுக்கு பெண் குழந்தை பிறந்­த­நி­லை­யில், கடந்த 17ஆம் தேதி கௌத­மின் உற­வி­னர் ஒரு­வர் இறந்­து­விட்­ட­தாக தக­வல் வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, ஆர­ணியை அடுத்த காரணி கிரா­மத்­தில் உள்ள தனது தந்தை வீட்­டிற்கு கௌதம் சென்­றுள்­ளார்.

அதன்­பி­றகு அவர் வீடு திரும்ப வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், கண­வ­ரின் கைபேசி எண்­ணும் தொடர்பு கொள்ள முடி­யா­மல் போனது.

இத­னால் சந்­தே­கம் ஏற்பட்ட அமுலின் உறவினர்கள், கௌத­மின் ஊருக்குச் சென்று பார்த்­த­போது, அங்கே அவர் இறந்­து­விட்­ட­தாக கண்­ணீர் அஞ்­சலி சுவ­ரொட்டி ஒட்­டப்­பட்­டி­ருந்­த­தைக் கண்டு அதிர்ந்தனர். இது குறித்து அமு­லுக்குத் தக­வல் அளித்­த­னர்.

இதைத்­தொ­டர்ந்து, தனது கண­வர் ஆண­வக் கொலை செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவ­ரது மர­ணம் குறித்து தன்­னி­டம் மறைத்த அவ­ரது குடும்­பத்­தி­னர் மீது நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தி­யும் ஆரணி காவல் நிலை­யத்­தில் அமுல் புகார் அளித்­துள்­ளார்.

இதுகுறித்து போலிசார் விசா­ரணை நடத்தி வருகின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!