சென்னை: தமிழகத்தில் தனி நபர்களின் கட்டுப்பாட்டில் யானைகளை வளர்ப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவில் யானைகளுக்கு பாகன் களை நியமிக்கவும் அவற்றை முறை யாகப் பராமரிக்கவும் கோரிய வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேச வலு அமர்வின் முன்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு ேநற்று முன்தினம் மீண்டும் விசா ரணைக்கு வந்தபோது, தமிழகக் கோவில்களில் 32 யானைகளும் தனி நபர்களின் கட்டுப்பாட்டில் 31 யானைகளும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் 67 யானைகளும் இருப்பதாக மாநில அரசு கூறியது.
இந்த விவரங்களைக் காணொளி யாகப் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் அவற்றை அறிக்கையாக தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் எனவும் அரசு கோரியது.
இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபா் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
அத்துடன், சிகிச்சை வழங்கு வதற்கான நோக்கத்தைத் தவிர, வேறு எதற்காகவும் எந்தவொரு யானையையும் சிறைபிடிக்கக் கூடாது. தனிநபர்கள் யானைகளைப் பிடித்து தங்களது கட்டுப் பாட்டுக்குள் வைத்துக்கொள்ளாமல் இருப்பதை அரசு அவ்வப்போது உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளதாக தினகரன் நாளிதழ் தகவல் குறிப்பிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், கோவில் யானைகளைப் பெரிய இடங்களில், இயற்கையான சூழலில் பராமரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
"கோவில் யானைகளை நடைப்பயிற்சிக்குக் கூட்டிச் செல்வதில்லை. முறையான உணவு வழங்குவதில்லை. யானைகளுக்கு உணவு வழங்குவதிலும் ஊழல் நடப்பதால்தான் இயற்கை உணவை மட்டுமே வழங்குகின்றனர். புரதச்சத்து உள்ள உணவுகளை வழங்குவதில்லை," என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆண் யானைக்கு துணையாக பெண் யானையையும் பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

