'வாக்கி டாக்கி' மாயம்; நால்வர் கைது

'வாக்கி டாக்கி' மாயம்; நால்வர் கைது

1 mins read
9ceeaf2a-a206-488a-83fc-53a3a7778a47
-

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலைய காவலரிடம் இருந்து 'வாக்கி டாக்கி'யைத் திருடிய குற்றச்சாட்டின் தொடர்பில், நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த இன்பசுரேஷ், முகேஷ், கண்ணன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

மணல் திருடர்களுடன் சேர்ந்து காவலர் அன்பழகன் மது அருந்தியபோது இந்த திருட்டு நடந்ததாகக் கூறப் படுகிறது. மணல் கடத்தல் வாகனத்தை விடுவிக்கக் கோரி, 'வாக்கி டாக்கி'யைத் திருடி மணலில் புதைத்து வைத்தது விசாரணையில் தெரியவந்தது.