தண்டையார்பேட்டை: புளியந்தோப்பு 4வது தெருவைச் சேர்ந்த சபிமுகமது, 21, என்பவர் ஒரு திருட்டுச் சம்பவம் தொடர்பில் புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், வலிப்பு நோய் காரணமாக கடந்த 22ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சபிமுகமதுவை சேர்த்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த சபிமுகமது நேற்று முன்தினம் கழிவறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். ஆனால், நீண்டநேரம் ஆகியும் வராத நிலையில், கழிவறையில் இருந்து தப்பியது தெரிந்தது. அதன்பின்னர் போலிசாரின் தேடுதல் வேட்டையில் சபிமுகமது பிடிபட்டார்.
தப்பியோடிய கைதி பிடிபட்டார்
1 mins read
-

