செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
25d878ee-1faa-431c-8ef4-fa39c8f3ed73
-

ஆட்சியர்களுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: கடந்த சில மாதங்களாகவே பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், "பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்து நிகழாத வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பட்டாசுகளில் ஆபத்தில்லாத ரசாயனங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்," என மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீபாவளித் திருநாள் நெருங்கி வருவதைத் தொடர்ந்து, விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

ஈமச் சின்னம் இனி புராதனச் சின்னம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பங்குநத்தம் அருகே பெருங்கற்கால மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக எஞ்சி நிற்கும் ஈமச்சின்னங்கள் புராதனச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏகிலி காட்டுகுட்டா மலையில் இருக்கும் இந்த ஈமச்சின்னங்கள் இனி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்கால மனிதா்களின் நாகரிக வளா்ச்சியை பழைய கற்காலம், இடை கற்காலம், புதிய கற்காலம் என மூன்று வகையாகப் பிரித்திருந்தனர். இதில், பழைய கற்காலத்தின் இறுதிக்காலம் பெருங்கற்காலம் எனக் குறிப்பிடப்படுகிறது.

படம்: தமிழக ஊடகம்