மூன்றாம் அலை அச்சம்: 20,000 முகாம்களில் தடுப்பூசி

சென்னை: கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க, இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழ கத்தில் மீண்டும் நடக்கிறது.

மாநிலம் முழுவதும் அமைக்கப் பட்டுள்ள 20,000 தடுப்பூசி முகாம் களில் 15 லட்சம் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட உள்ளது. இன்றைய முகாமை மக்கள் சிறந்த முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

முதல் கட்டமாக நடந்த முகாமில் 29 லட்சம் பேருக்கும் இரண்டாம் கட்டமாக நடந்த முகாமில் 16 லட்சத்து 43,879 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இன்று மூன்றாம் கட்ட முகாம் நடத்தப்படுவதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “தடுப்பூசி போடும் பணியில் எந்த ஒரு தொய்வும் ஏற்பட்டுவிடாதபடி அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசியைப் பிரித்து அனுப்பி உள்ளோம். தமிழ்நாட்டில் இன்று 20,000 மையங்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

இதற்கிடையே, தலைநகர் சென்னையில் மட்டும் 1,600 தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் கூறியுள்ளார்.

24.60 லட்சம் தடுப்பூசி வருகை

தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பி வருகிறது. அதன்படி கடந்த இரு நாள்களில் மட்டும் 24.60 லட்சம் தடுப்பூசி தமிழகம் வந்ததைத் ெதாடர்ந்து, இன்றைய முகாமில் இலக்கை விட கூடுத லாக தடுப்பூசி போட சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!