மதுரை: தமிழ்நாட்டில் கடந்த 36 மணிநேரத்தில் மொத்தம் 2,512 ரெளடிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்றக் காவலுடன் சிறைக்கு அனுப்பப்பட்ட தாகவும் நன்னடத்தைக்காக பிணை பெறப்பட்டு 1,927 ரவுடிகள் விடுவிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.
சிறைக்கு அனுப்பப்பட்ட வர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 கத்தி, அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய டிஜிபி சைலேந்திர பாபு, மதுரையில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயரதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். குற்றச்செயல்களை தடுப்பதற்கான காவல்துறை யின் அதிரடி நடவடிக்கை தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

