புதுக்கோட்டை: பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஆங்காங்கே விதவிதமான முறையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் தாம்பரம் ரயில் நிலையம், சென்னை சாலைகளில் கொரோனா குறித்த பிரம்மாண்ட ஓவியங்கள் வரையப்பட்டன.
கொரோனா கிருமி தோற்றத் துடனான போண்டா, தோசை, பரோட்டாவையும் புதுமையாகத் தயாரித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்போது ஒரு புது முயற்சியாக தங்கத்தில் கொரோனா ஜிமிக்கி கம்மல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல இடங்களிலும் இந்தக் கம்மல் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதுக்கோட்டையில் நகைப்பட்டறை வைத்திருக்கும் வீரமணி என்பவர், தங்கத்தில் கொரோனா வடிமைப்புடன் கூடிய ஜிமிக்கி கம்மலைத் தயார் செய்து காட்சிப்படுத்தியுள்ளார். இதேபோல் மதுரையிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் கம்மலுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஜிமிக்கி கம்மலை செய்துள்ேளன். விளம்பரத்திற்காகவும் வியாபார யுக்திக்காகவும் தயாரிக்கவில்லை.
நகைக் கொல்லர் வீரமணி

