நிர்மலா தேவி கொலை வழக்கில் எட்டு பேர் கைது

நிர்மலா தேவி கொலை வழக்கில் எட்டு பேர் கைது

1 mins read
29df99cf-3c1c-45fe-8551-5177a164556b
நிர்மலா தேவி (இடது படம்) கொலை வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அய்யனார், 21, செம்பட்டி சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த பூபாலன், 21, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் பெ.நடராஜன், 45, ஆகிய மூவரையும் தாடிக்கொம்பு போலிசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். படம்: ஊடகம் -
multi-img1 of 2

திண்­டுக்­கல்: நிர்­மலா தேவி என்ற பெண் பட்­டப்­ப­க­லில் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில், ஒரே நாளில் வெவ்­வேறு இடங்­களில் எட்டு பேர் சிக்­கி­னர்.

திண்­டுக்­கல்-மதுரை தேசிய நெடுஞ்­சா­லை­யில் பதுங்கி இருந்த மூவரை போலி­சார் கைது செய்த நிலை­யில், இந்த வழக்கு தொடர்­பாக திருச்சி நீதி­மன்­றத்­தில் ஐவர் நேற்று முன்­தி­னம் சர­ண­டைந்­த­னர்.

தேவேந்­திர குல வேளா­ளர் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ராக இருந்த பசு­பதி பாண்­டி­யன் என்­ப­வர் கடந்த 2012ல் திண்­டுக்­கல் மாவட்­டம் அருகே உள்ள நத்­த­வ­னப்­பட்­டி­யில் கொலை செய்­யப்­பட்­டார்.

இந்­தக் கொலை சம்­ப­வத்­துக்கு நிர்­மலா தேவி உடந்­தை­யாக இருந்த தாக­வும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், பசு­ப­தி­பாண்­டி­யன் கொலையில் 5வது குற்­ற­வாளியாகச் சேர்க்­கப்­பட்­டி­ருந்த நிர்­மலா தேவி, கடந்த 22ஆம் தேதி அடையாளம் தெரி­யாத சில­ரால் தலை துண்­டிக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டார்.

திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பதுங்கி இருந்த மூவர் சிக்கிய நிலையில், அவர்களை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தியதைத் தொடர்ந்து மூவரை யும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நிர்மலா தேவி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஐவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் குமார் உத்தரவிட்டுள்ளார்.