நகைக்கடன் முறைகேடு: ஆய்வு செய்ய குழு அமைப்பு

சென்னை: நகைக்­க­டன் பெறு­வ­தற்­காக கூட்­டு­றவு வங்­கி­களில் நடந்­துள்ள முறை­கே­டு­கள் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய நிலை­யில், இது குறித்து விசா­ரிக்க தமி­ழக அரசு குழு ஒன்றை அமைத்­துள்­ளது.

கூட்­டு­றவு வங்­கி­களில் பெறப்­பட்டுள்ள அனைத்து வித­மான பொது நகைக் கடன்­க­ளை­யும் இந்­தக் குழு ஆய்வு செய்­யும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக கூட்­டு­றவு சங்­கங்­க­ளின் பதி­வா­ளர் அனைத்து கூட்­டு­றவு வங்­கி­க­ளுக்­கும் சுற்­ற­றிக்கை ஒன்றை அனுப்­பி­யுள்­ளார்.

அதில், தமி­ழ­கத்­தில் உள்ள கூட்டு­றவு வங்­கி­களில் ஐந்து பவு­னுக்கு உட்­பட்ட நகைக்­க­டன்­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்டு வரும் நிலை­யில், இந்­தக் கடன் வழங்­கப்­பட்­ட­தில் ஏரா­ள­மான முறை­கே­டு­கள் நடந்­தி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"ஐந்து பவு­னுக்கு மட்­டும் அல்­லா­மல் கூட்­டு­றவு வங்­கி­க­ளால் வழங்­கப்­பட்ட அனைத்து பொது நகைக்­க­டன்­க­ளை­யும் ஆய்வு செய்ய அரசு உத்­த­ர­விட்டு உள்­ளது.

"கூட்­டு­றவு சார் பதி­வா­ளர், கூட்டு­றவு வங்­கி­யின் மேற்­பார்­வை­யா­ளர், நகை மதிப்­பீட்­டா­ளர் ஆகி­யோர் கொண்ட குழுவை அமைக்க அரசு உத்­த­ர­விட்டு உள்­ளது," என்று கூட்­டு­றவு சங்­கங்­க­ளின் பதி­வா­ளர் சுற்­ற­றிக்­கை­யில் மேலும் குறிப்­பி­ட்­டுள்­ளார்.

இந்­தக் குழு­வா­னது மாநி­லம் முழு­வ­தும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்­கி­க­ளி­லும் பெறப்­பட்ட நகைக்­க­டன்­களை ஆய்வு செய்­யும் என்­றும் இந்­தப் பணி விரை­வில் துவங்­கும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!