சென்னையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த முதலை

சென்னையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த முதலை

1 mins read
e55cb4db-eea0-423a-8dfe-1b90cd5606ce
-

சென்னை: குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலையால் சென்னை பெருங்குளத்தூரில் பீதி நிலவியது.

அங்கு வசிக்கும் விஜயகுமார் என்பவரது வீட்டுக்கு அருகே விளையாடிய சிறுவர்கள் திடீரென ஓடி வந்து முதலையைப் பார்த்ததாக தெரிவித்தனர்.

இத்தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் பலர் வீடுகளைப் பூட்டிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

எனினும், விஜயகுமார் பதற்றம் அடையாமல் தன் வீட்டுக்கு வெளியே இருந்த இரண்டு அடி நீளமுள்ள முதலையை சாமர்த்தியமாகப் பிடித்ததுடன், உரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார்.

அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து அம்முதலை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளனர்.