தேனி: முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அணைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நேற்று திருவனந்தபுரம் காவல்துறை தலைமையகத்துக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில், எதிர்முனையில் பேசிய ஆடவர், குண்டு வைத்து அணையைத் தகர்க்கப்போவதாகக் கூறினார்.
மேலதிக தகவல்கள் எதையும் குறிப்பிடாமல் அவர் இணைப்பை துண்டித்ததை அடுத்து, போலிசார் விசாரணையைத் தொடங்கினர். இதில் மிரட்டல் விடுக்கப் பயன்படுத்தப்பட்ட கைபேசிக்கான இணைப்பு திருச்சூரில் பெறப்பட்டது தெரியவந்தது.
அணைப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் மூலம் அம்மிரட்டல் வெறும் புரளி என்பதும் உறுதியானது. மிரட்டல் விடுத்தவருக்கு வலைவீசப்பட்டுள்ளதாகப் போலிசார் தெரிவித்தனர்.
எனினும் அணைப்பகுதியில் வழக்கத்தைவிட கூடுதல் போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

