திருச்சியில் திருமலை ஏழுமலையான் கோவில்: அறங்காவலர் குழு உறுப்பினர் தகவல்

சென்னை: திருப்­பதி திரு­ம­லை­யில் உள்ள ஏழு­ம­லை­யான் கோவிலைப் போன்று திருச்­சி­யி­லும் ஒரு கோவில் கட்­டப்­படும் என திருப்­பதி தேவஸ்­தான அறங்­கா­வ­லர்­கள் குழு உறுப்­பி­னர் சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யைச் சேர்ந்த இவர், இந்தக் கோரிக்கை தமி­ழக பக்­தர்­களால் நீண்ட நாள்­க­ளாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­வ­தாகக் குறிப்­பிட்­டுள்­ளார்.

“இது­தொ­டர்­பான திட்ட அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு ஒப்­பு­தல் பெறப்­படும். பின்­னர் திருச்­சி­யி­லும் தேவஸ்­தா­னத்­தின் கோவி­லைக் கட்ட உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்,” என்று மருத்­து­வர் சங்­கர் தெரி­வித்­தார்.

இந்த அறி­விப்­பால் தமி­ழக பக்­தர்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

ஏற்­கெ­னவே பல்­வேறு மாநிலங்­களில் திரு­மலை அற­வா­ரி­யம் கோவில்­கள் கட்டி பரா­ம­ரித்து வரு­கிறது. அந்த வகை­யில் திருச்­சி­யி­லும் இதே­போன்ற கோவில் கட்­டப்­ப­பட உள்­ளது.

மேலும், சென்னை அருகே உள்ள பகு­தி­யில் ஸ்ரீவெங்­க­டேஸ்­வரா திவ்ய ஷேத்­ரம் என்ற கோயிலை கட்­ட­வும் திரு­மலை திருப்­பதி கோவில் நிர்­வா­கம் முடிவு செய்­துள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கான நிலம் கைய­கப்­படுத்­தப்­பட்ட பின்­னர் கட்­டு­மானப் பணி­கள் தொடங்­கும் என்று குறிப்­பிட்ட அறங்­கா­வ­லர் குழு உறுப்­பி­னர் சங்­கர், இக்­கோவி­லைக் கட்டு­வ­தில் நிர்­வா­கம் மிகுந்த ஆர்­வத்­து­டன் கட­மை­யாற்றி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார். பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!