காவல்துறை நடவடிக்கை: இரு தினங்களில் மூவாயிரம் ரவுடிகள் அதிரடிக் கைது

காவல்துறை நடவடிக்கை: இரு தினங்களில் மூவாயிரம் ரவுடிகள் அதிரடிக் கைது

1 mins read
6c923f34-2fff-412e-8c0a-8144e75f95a6
-

சென்னை: தமி­ழக காவல்­துறை மேற்­கொண்ட அதி­ரடி நட­வ­டிக்கை­யின் மூலம் மூவா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கைதா­கி­னர்.

மாநி­லம் தழு­விய அள­வில் கடந்த 23ஆம் தேதி இரவு 'முற்றுகைச் செயல்­பாடு' என்ற பெய­ரில் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்கை சுமார் 52 மணி­நே­ரம் நீடித்­தது.

அப்­போது 21,592 பழைய குற்­ற­வா­ளி­கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். விசாரணைக்குப் பின்னர் 3,325 பேர் அதி­ர­டி­யாக கைது செய்­யப்­பட்­ட­னர்.

இவர்­களில் நீதி­மன்­றத்­தால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட 294 பேர் அடங்­கு­வர் என்று தமி­ழக டிஜிபி சைலேந்­திர பாபு தெரி­வித்­துள்­ளார்.

பல்­வேறு குற்ற வழக்­கு­களில் சம்­பந்­தப்­பட்­டுள்ள 972 நபர்­கள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற காவ­லுக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட நிலை­யில், நன்­ன­டத்­தைக்­காக பிணை ஆணை பெறப்­பட்டு 2,526 பேர் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்த அதி­ரடி நட­வ­டிக்­கை­யின்­போது கைதா­ன­வர்­க­ளி­டம் இருந்து ஏழு நாட்­டுத் துப்­பாக்­கி­கள், கத்­தி­கள் உள்­ளிட்ட ஆயு­தங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

கொலைக் குற்­றங்­களில் ஈடு­படும் ரவு­டி­க­ளுக்கு எதி­ரான காவல்­து­றை­யின் இந்த கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் நீடிக்­கும் என டிஜிபி சைலேந்­திர பாபு தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழக காவல்­துறை அவ்­வப்­போது இது­போன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது வழக்­கம். எனி­னும் ஒரே சம­யத்­தில் இர­வோடு இர­வாக நட­வ­டிக்­கையை தொடங்கி, இரு தினங்­களில் நூற்­றுக்­க­ணக்­கான பழைய கைதி­களை கைது செய்­வது அடிக்­கடி நிக­ழாது என ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில் சமூக விரோ­தி­க­ளுக்கு எதி­ரான இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் வர­வேற்­கத் தகுந்­தது என சமூக ஆர்­வ­லர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.