விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் போது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டையிலும் கீழடி போன்று ஆராய்ச்சி நடைபெறும் என தொல்லியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். அரசுத் தரப்பில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள், செப்பேடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் போ.கந்தசாமி கூறியுள்ளார்.
கி.மு.4,000 முதல் கி.மு.3,000 வரையிலான காலகட்டத்தில் இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை தொல்லியல் சான்றுகள் நிரூபிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சங்க கால கறுப்பு-சிவப்பு மண்பாண்ட ஓடுகளும் இரும்பு பொருள்களும் வெம்பக்கோட்டையைச் சுற்றியுள்ள மேடான பகுதிகளின் மேற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.