‘தடுப்பூசி போடுவதில் தமிழகம் சாதனை’

கடலூர்: தமிழகத்தில் தொடர்ந்து கடந்த மூன்று வாரங்களாக ஞாயிறுதோறும் ெகாவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

"மாநிலத்தில் மூன்றாவது முறையாக நடந்த தடுப்பூசி முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கையும் தாண்டி 24 லட்சத்து 85,814 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இம்முறையும் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.

"தடுப்பூசி போடுவதை மக்கள் திருவிழாவைப்போல் கொண்டாடி வருகின்றனர். முதல் கட்ட முகாமில் 29 லட்சம் பேருக்கும் இரண்டாம் கட்ட முகாமில் 16 லட்சத்து 43,879 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!