உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் ெவளியீடு 80,819 பேர் போட்டி; 2,981 பேர் தேர்வு

சென்னை: ஊரக உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான இறுதி வேட்­பா­ளர் பட்­டி­யலை தமி­ழக தேர்­தல் ஆணை­யம் வெளி­யிட்­டுள்­ளது.

அதன்­படி, 27,762 பத­வி­யி­டங்­களுக்கு 80,819 வேட்­பா­ளர்கள் ­ேபாட்டி­யி­டு­கின்­ற­னர்.

ஒன்­பது மாவட்­டங்­களில் நடை­பெற உள்ள ஊரக உள்­ளாட்­சித் தோ்தலில் போட்டியிட 79,433 பேரின் வேட்பு மனுக்­களும் 28 மாவட்­டங்­களில் காலி­யாக உள்ள உள்­ளாட்­சிப் பிரதி­நி­தி­க­ளுக்­கான தோ்தலில் போட்டியிட 1,386 பேரின் மனுக்­களும் இறுதியாக ஏற்கப்பட்டன.

இதையடுத்து, மொத்­தம் 80,819 வேட்பாளர்கள் போட்டிக் களத்­தில் உள்­ள­தாக மாநி­லத் தோ்தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளதாக தினமணி ஊடகம் கூறியுள்ளது.

14,571 வேட்­பா­ளர்­கள் தங்­க­ளின் வேட்­பு­ம­னுக்­க­ளைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்­ட­தாகவும் 2,981 பத­வி­யி­டங்­களுக்குப் போட்டியின்­றி வேட்பாளர்கள் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும் தேர்தல் ஆணை­யம் குறிப்­பிட்டுள்­ளது.

புதி­தா­கப் பிரிக்­கப்­பட்ட காஞ்சி புரம், செங்­கல்­பட்டு, வேலூர், ராணிப்­பேட்டை, திருப்­பத்­தூர், விழுப்­பு­ரம், கள்­ளக்­கு­றிச்சி, திரு­நெல்­வேலி, தென்­காசி ஆகிய ஒன்­பது மாவட்­டங்­க­ளுக்­கும் எஞ்­சி­யுள்ள 28 மாவட்­டங்­களில் காலி­யாக உள்ள இடங்­க­ளுக்­கும் உள்­ளாட்­சித் தேர்­தல் நடத்­தப்­பட உள்­ளது.

வரும் அக்­டோ­பர் மாதம் 6, 9 ஆகிய தேதி­களில் இரு கட்­ட­மாக நடை­பெற உள்­ள இத்தேர்­த­லுக்­கான வாக்கு எண்­ணிக்கை அக்­டோ­பர் 12ஆம் தேதி நடை­பெ­ற உள்ளது.

அனைத்துக் கட்­சி­களும் தீவிர தேர்­தல் பணி­யில் ஈடு­பட்டு வரும் நிலை­யில், அதி­முக ஒருங்கிணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் அக்­டோ­பர் 1ஆம் தேதி முதல் தமது கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து பிர­சா­ரம் ெசய்ய உள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்.

அதி­முக இணை ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மா­ன பழனி­சாமி கடந்த வாரத்தில் இருந்து பிரசாரத்தில் ஈடு­பட்டு வரு­கிறார்.

இதற்கிடையே, ஊரக உள்­ளாட் சித் தேர்­த­லில் போட்­டி­யி­டும் தமது மக்­கள் நீதி மய்­யம் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து கமல்­ஹா­சன் 'உள்­ளாட்சி-உரி­மைக்­கு­ரல்' என்ற முழக்க வாசகத்துடன் நேற்று தனது பிர­சாரத்தை காஞ்­சீ­பு­ரம் மாவட்­டம் கோவூ­ரில் இருந்து தொடங்கினார்.

ராணிப்­பேட்டை மாவட்­டம், அரக்­கோ­ணத்­தில் அமைச்­சர் ராஜ­கண்­ணப்­பன் பிர­சா­ரத்தில் பேசியபோது, "கடந்த 10 ஆண்­டு­க­ளாக நடை பெற்ற அதி­முக ஆட்­சி­யின்போது கிரா­மப்­புறங்களில் இயக்­கப்­ப­டா­மல் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்­து­கள் விரை­வில் இயக்­கப்­பட உள்ளன. அதற்குத் தேவை­யான புதிய பேருந்­து­களை வாங்கவும் தமி­ழக அரசு முடிவு எடுத்துள்ளது," என்று தெரி­வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!