தேங்காய் நீர் சுத்திகரிப்பு இயந்திரம்; இந்தியாவிலேயே முதல்முறை

1 mins read
e849d1bb-2a3b-4219-9dd8-8ce107f8257c
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தேங்காய் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைத் தொடங்கிவைத்து, பார்வையிடுகிறார் மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல். படம்: ஊடகம் -

தஞ்­சா­வூர்: ஆல­யங்­களில் உடைக்­கப்­படும் தேங்­காய்களின் நீரை வீணாக்­கா­மல் அதை பக்­தர் களுக்கே விநி­யோ­கம் செய்யும் புதிய நடைமுறை அறி­மு­க­மாகி உள்­ளது.

தஞ்­சா­வூர் அருகே உள்ள புன்னை­நல்­லூர் மாரி­யம்­மன் கோயி­லில் ரூ.7 லட்­சம் செல­வி­ல் தேங்­காய் நீரை சுத்திகரித்து வழங்­கும் புதிய இயந்­தி­ரம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை மத்­திய நீர் வள, உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை இணை அமைச்­சர் பிர­க­லாத் சிங் படேல் நேற்­று­ காலை பொது­மக்­கள் பயன்பாட்­டுக்­கு அறிமுகப் படுத்தினார்.

தேங்­காய் நீர் வீணாவதைத் தடுக்­கும் வித­மாக, இந்­திய உண­வுப் பத­னத் தொழில்­நுட்­பக் கழ­கம் இந்த நவீன இயந்­தி­ரத்தை அமைத் துள்­ளது.

"இதன்­மூ­லம் கோயி­லில் நேர்த்­திக் கட­னாக பக்தர்கள் உடைக்கும் தேங்­காய் நீர் இதுவரை பயனின்றி வீணாகிய நிலையில், இனிமேல் அவை சுத்­தி­க­ரிக்கப்பட்டு பக்­தர்­களுக்கே விநியோகம் செய்யப்படும்.

"இந்­தி­யா­வி­லேயே முதல்­மு­றை­யாக கோயில்­களில் அமைக்­கப்­பட்­டு வரும் இந்த இயந்திரத்தால் ஆேராக்கியம் ெமரு­கே­றும். இந்த நவீன இயந்திரத்தின் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய்," என தொழில்­நுட்­பக் கழ­கப் பேரா­சி­ரி­யர்­கள் கூறியுள்­ள­னர்.