ஒரே கிராமத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு சிறுநீரகப் பாதிப்பு

காஞ்­சி­பு­ரம்: செங்­காடு கிரா­மத்­தின் ஒரே தெரு­வில் வசிக்­கும் எட்டு பேருக்கு சிறு­நீ­ர­கப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து, உட­ன­டி­யாக இக்­கி­ரா­மத்­துக்கு விரைந்த சென்னை ராஜீவ்­காந்தி அரசு மருத்­து­வர்­கள் அங்­குள்ள மக்­கள் அனை வரை­யும் பரி­சோ­தித்­த­னர்.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், திருப்­பெ­ரும்­பு­தூர் அருகே உள்ள செங்­காடு கிரா­மத்­தில் 350 குடும்­பங்­களில் 1,800 பேர் வசித்து வரு­கின்­ற­னர்.

இவர்­களில், ஒரே தெரு­வைச் சேர்ந்த எட்டு பேருக்கு அடுத்­த­டுத்து சிறு­நீ­ர­கக் கோளாறு ஏற்­பட்­டுள்­ள­தாக சிறு­நீ­ர­கத் துறை தெரி­வித்­தது.

இதைத்­தொ­டர்ந்து, சென்னை ராஜீவ்­காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யின் முதல்­வர் தேரணி ராஜன் தலை­மை­யில் 40 மருத்­து­வர்­கள் உட்­பட 62 பேர் கொண்ட குழு­வி­னர் செங்­காடு கிரா­மத்­தில் வீடு­வீ­டா­கச் சென்று அவர்­க­ளது உடல் எடை, உயர் ரத்த அழுத்­தம், ரத்­தப் பரி­சோ­தனை, சிறு­நீ­ர­கப் பரி­சோ­த­னை­க­ளைச் செய்­த­னர். அத்­து­டன், அங்­குள்ள நிலத்­தடி நீரை­யும் ஆய்­வுக்கு அனுப்­பி­வைத்­த­னர்.

இது­கு­றித்து அப்­ப­குதி மக்­கள் கூறு­கை­யில், செங்­காடு கிரா­மத்­தின் பக்­கத்­தில் இயங்கி வரும் அலு­மி­னி­யம் உருக்­கும் ஆலை­யில் இரவு நேரத்­தில் ஏற்­படும் புகை­யால் மூச்­சுத்­தி­ண­றல் ஏற்­ப­டு­வ­தா­க­வும் அதன் துகள்­கள் தண்­ணீ­ரில் கலப்­ப­தா­க­வும் குற்­றஞ்­சாட்டி உள்­ள­னர். தமி­ழக அரசு இப்­பி­ரச்­சினை குறித்து உட­ன­டி­யாக ஆய்வு நடத்தி அந்த தொழிற்­சா­லையை மூட நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என­வும் கேட்டுக்­கொண்­டுள்­ள­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!