சென்னை: திமுகவினர் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில் 50 விழுக்காட்டையாவது நிறைவேற்றியுள்ளனரா என கேள்வி கேட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிறு குழந்தைகளின் 'ஆசை தோசை அப்பளம் வடை' விளையாட்டு போலத் தான் திமுகவின் கருத்தும் பச்சைப் பிள்ளைத்தனமாக உள்ளது என விமர்சித்தார்.
நான்கு மாதங்களுக்குள் 505 வாக்குறுதிகளில் 202ஐ நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் சுட்டிக்காட்டி இருந்தார்.
இதை எதிர்க்கட்சியான அதிமுக கடுமையாக சாடி வருகிறது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகை யில், "மகளிருக்கு மாதம் ரூ.1,000, முதியோர் ஓய்வூதி யம் ரூ.1,500, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நம்பி பெருவாரியான மக்கள் வாக்களித்தார்கள்.
"இன்றைக்கு அனைத்துக் கடனுக்கான வட்டி அதிகரித்துச் செல்கிறதே தவிர வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை," என குறிப்பிட்டுள்ளார்.
"202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகக் கூறு கிறார்கள். அவை எந்தெந்த வாக்குறுதிகள் என்பதை பட்டியலிட முடியுமா?" என ஜெயக்குமார் கேட்டுள்ளார்.

