பணி நிரந்தரம் செய்யக் கோரி 2,000 தாதியர் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி 2,000 தாதியர் உண்ணாவிரதப் போராட்டம்

1 mins read
fb83fe67-92ce-4fa5-8625-3a01cf74dae3
-

சென்னை: தற்­கா­லி­கப் பணி­யில் நிய­மிக்­கப்­பட்ட 2,000 தாதி­யர் தங்­க­ளது பணியை நிரந்­த­ரம் செய்­யக் கோரி தொடர் உள்­ளி­ருப்பு, உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

சென்னை தேனாம்­பேட்­டை­யில் உள்ள மருத்­து­வம், ஊரக நலப் பணி­கள் இயக்­கக வளா­கத்­தில் இந்­தப் போராட்­டம் தொடர்­கிறது.

இது­கு­றித்து போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள தாதி­யர் கூறு­கை­யில், "திமுக தேர்­தல் அறிக்­கை­யில் கூறியபடி கொரோனா காலத்தில் உயி­ரைப் பண­யம் வைத்து அர்ப்­பணிப்பு உணர்­வு­டன் மருத்துவச் சேவை­யாற்­றிய எங்­க­ளை­யும் பணி நிரந்­த­ரம் செய்யவேண்­டும்.

"திமுக அரசு ஆட்­சிக்கு வந்­த­தும் 1,212 ஒப்­பந்த முறை­யில் பணி புரிந்த தாதி­யரை பணி நிய­ம­னம் செய்­தது.

"மீத­முள்ள 3,485 தாதி­யர் அனைவரும் பணி­நி­ரந்தரம் செய்­யப்­ப­டு­வோம் என்ற எதிர்­பார்ப்புடன் இருந்து வந்தோம்.

"ஆனால், கடந்த இரு மாதங்­க­ளாக தற்­கா­லிக பணி நிய­ம­னம் செய்­யப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான தாதி­யர் பணி­யில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ள­னர். உணவு, தங்­கும் வசதி ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. அரசு அறி­வித்த ஊக்­கத்­தொ­கை­யும் வழங்­கப்­ப­ட­வில்லை.

"தற்­கா­லிக பணி நிய­ம­னம் செய்­யப்­படும் தாதி­ய­ருக்கு ரூ.14,000 சம்­ப­ளம் வழங்­கப்­ப­டு­கிறது. ஆனால், இந்த சம்பளமும் கடந்த கடந்த இரண்டு மூன்று மாதங்­க­ளாக முறை­யாக வழங்­கப்­படவில்லை," என்­று புதிய தலை­முறை தொலைக்­காட்சி செய்தி தெரி­வித்தது.