உள்ளாட்சித் தோ்தலில் 100% மக்களும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது.
ஏனாத்தூா் சங்கரா கலை, அறிவியல் கல்லூரியிலிருந்து இப்பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டனா். முன்னதாக கல்லூரி நுழைவு வாயிலில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியையும் வாசித்தனா். மக்கள் வாழ்க்கையை மேம்படச் செய்யும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். படம்: தமிழக ஊடகம்

