சென்னையில் அரசுப் பேருந்தில் திடீர் தீ; அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்

சென்னையில் அரசுப் பேருந்தில் திடீர் தீ; அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்

1 mins read
c5e81b87-9a54-4ed1-9889-1aac8ff3fd9d
தீப்பிடித்த பேருந்தை அவ்வழியே சென்ற மக்கள் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். படம்: ஊடகம் -

சென்னை: அர­சுப் பேருந்­தில் திடீ­ரென தீப்­பி­டித்­ததை அடுத்து அதில் இருந்த பய­ணி­கள் உட­ன­டி­யாக அதில் இருந்து இறங்கி, அல­றி­ய­டித்­த­படி ஓட்­டம் பிடித்­த­னர்.

எனி­னும் இந்த விபத்­தால் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்­றும் அனை­வ­ரும் அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர் தப்­பி­னர் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். நேற்று காலை கோயம்­பேடு பகுதி­யில் இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­தது.

திருச்­சி­யில் இருந்து சென்னை நோக்கி வந்த அர­சுப் பேருந்­தின் இன்­ஜின் பகு­தி­யில் திடீ­ரென புகை கிளம்­பி­யது.

இத­னால் பேருந்தை நிறுத்­திய ஓட்­டு­நர் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக பய­ணி­கள் அனை­வ­ரை­யும் பேருந்­தில் இருந்து இறங்­கு­மாறு கூறி­னார்.

பய­ணி­கள் ஒவ்­வொ­ரு­வ­ராக இறங்­கிக்கொண்­டி­ருந்­த­போதே இன்­ஜின் பகு­தி­யில் பெரி­தாக தீ மூண்­டது.

இத­னால் பேருந்து ஓட்­டு­ந­ரும் கீழே குதித்­தார். இந்­நி­லை­யில் பேருந்­தின் இதர பகு­தி­க­ளுக்­கும் தீ பர­விய நிலை­யில், தீய­ணைப்பு வீரர்­கள் வந்து சேர்ந்­த­னர். இரண்டு தீய­ணைப்பு வாக­னங்­கள் தீயை அணைக்­கும் பணி­யில் ஈடு­பட்­டன.