தூத்துக்குடி: கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு போலிசிடம் சிக்கினார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சந்திரமோகன் என்ற அந்த ஆடவருக்கு இப்போது 72 வயதாகிறது. 1999ஆம் ஆண்டு இவர் கொலை வழக்கில் சிக்கினார்.
எனினும் திடீரென தலைமறைவானார்.
சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இருப்பிடத்தை தெரிந்து கொண்ட போலிசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கைது செய்த தனிப்படை போலிசாரை காவல் ஆணையர் பாராட்டி உள்ளார்.

