ரூ.1,000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துகள் மீட்பு

ரூ.1,000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துகள் மீட்பு

1 mins read
22b2406f-804b-4010-bf53-261bc48c149a
-

சென்னை: தமி­ழ­கத்­தில் 'இறை சொத்து இறை­வ­னுக்கே' என்­னும் தாரக மந்­தி­ரத்­தோடு கோவில் நிலங்­களை மீட்­கும் நட­வ­டிக்­கை­களை தினந்­தோ­றும் மேற்­கொண்டு வரு­வ­தாக தமி­ழக இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் சேகர்­பாபு தெரி­வித்­துள்­ளார்.

காஞ்­சி­பு­ரம் ஏகாம்­ப­ர­நா­தர் கோவி­லுக்­குச் சொந்­த­மான 150 கிர­வுண்ட் நிலங்­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவற்­றின் மொத்த மதிப்பு 500 கோடி ரூபாய் என்­றும் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

கோவி­லுக்­குச் சொந்­த­மான இடங்­க­ளைக் கண்­ட­றிந்து ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளி­டம் இருந்து மீட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், கோவி­லுக்­குச் சொந்­த­மான இடங்­களை ஒரு­வர் பெற்று வேறொ­ரு­வர் பயன்­ப­டுத்தி வரு­வதை கண்­ட­றிந்து அவற்­றை­யும் மீட்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

"மீட்­கப்­படும் நிலங்­க­ளின் வரு­மா­னத்தை கோவிலை நிர்­வ­கிக்­க­வும் பணி­யா­ளர்­க­ளுக்­கும் செல­விட இருக்­கி­றோம். கோவில் இடத்­தில் வணிக வளா­கம் கட்டி அதன்­மூ­லம் வரு­மா­னம் ஈட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

"சட்டப்பேரவையில் ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்கு இந்து சமய அற­நி­லை­யத்­துறை சொத்­துக்­கள் மீட்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

"அதன்­படி இன்­றைக்கு துறை சார்ந்த செய­லா­ளர், ஆணை­யா­ளர், இணை ஆணை­யா­ளர் உத­வி­யோடு மீட்­கப்­பட்ட நிலங்­க­ளின் மதிப்பு ரூ.1000 கோடியைத் தாண்­டி­விட்­டது," என்றார் அமைச்சர் சேகர்பாபு.