சென்னை: சண்டை போடாமல் ஒரு வருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் போவதுதான் கூட்டணிக்கு அழகு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
"ஊரக உள்ளாட்சித் தேர்த லுக்கான இட ஒதுக்கீட்டில் கூடுதல், குறைவு இருப்பது வழக்கமானதுதான். இதுகுறித்து யோசிக்கக்கூடாது.
ஞபோட்டியிடும் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவதே நமது இலக்காக இருக்க வேண்டும்,'' என்று அழகிரி சொன்னதைக் கேட்ட தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
"விட்டுக் கொடுத்து, விட்டுக் கொடுத்தே வீணாய் போனோம். கூட்டணிக் கட்சிகள் விட்டுக் கொடுப்பதே இல்லை. வருத்தமும் குறையும் நமக்கு மட்டும்தான் இருக்கிறது," என தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து கே.எஸ்.அழகிரி பேசியபோது, "நாம் விட்டுக் கொடுப்பதும் கூட்டணியில் இருப்பவர்கள் விட்டுக்கொடுப்பதும் தான் கூட்டணி. ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது அனைவரின் எதிர்காலம். கூட்டணியில் இடங்களை பகிர்ந்து கொடுப்பதில் நிறைய சிரமம் உள்ளது.
"எனவே, கூடுதல், குறைவு என்பது பற்றி யோசிக்கக்கூடாது. இடம் ஒதுக்கீடு செய்ததில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் வருத்தமும் மகிழ்ச்சியும் உள்ளது. நாம் போட்டியிடும் இடத்தில் வெற்றி பெற வேண்டும். தோழமைக் கட்சிகளின் வெற்றிக்கும் உழைக்க வேண்டும்," என்றார்.

