மறைந்த யோகா பாட்டிக்கு தேசிய அளவில் அங்கீகாரம்

மறைந்த யோகா பாட்டிக்கு தேசிய அளவில் அங்கீகாரம்

1 mins read
31ca76a6-9496-4fb1-87b4-d9f6465435b3
எட்டு வயது முதலே தனது தந்தையிடம் யோகா கலையை கற்றுத்தேர்ந்த 'பத்மஸ்ரீ' நாணம்மாள் பாட்டி, 90 ஆண்டுகளாக யோகா பயிற்சியில் ஈடுபட்டவர். படம்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

கோவை: கடந்த 45 ஆண்டுகளாக யோகா பயிற்­சியை பல லட்­சம் பேருக்கு கற்­றுக்­கொ­டுத்து, உடல்­நலக் குறை­வால் கால­மான யோகா பாட்டி நாணம்­மாள் என்பவரைப் பற்­றிய தக­வல் உடற்­கல்வி புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளது.

தேசிய அள­வில் நாணம்­மா­ளின் யோகா பயிற்­சிக்கு அங்­கீ­கா­ரம் கிடைத்­துள்­ளதை அடுத்து, தமி­ழ­கத்­தில் மட்­டு­மின்றி கோவை மாவட்­டத்­திற்­கான பெரு­மை­யா­க­வும் கோவை மக்­கள் இச்­செய்­தி­யைக் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

கோவை மாவட்­டத்­தைச் சேர்ந்த காலஞ்­சென்ற நாணம்மாளின் யோகா பயிற்சி குறித்த தக­வல் சிபி­எஸ்இ பிளஸ் 1 உடற்­கல்வி பாடப்­புத்­தக்­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளது. இதன்­மூ­லம், நாட்டில் உள்ள மாண­வர்­கள் நாணம்­மாள் பாட்டி குறித்து அறிந்­து­கொள்ள முடி­யும்.

ஏறக்­கு­றைய 45 ஆண்­டு­களில் சுமார் 10 லட்­சம் மாண­வர்­க­ளுக்கு இவர் யோகா கலையை கற்­றுக்­கொடுத்­துள்­ளார். அவர்­களில் 600 பேர் தற்­போது யோகா ஆசி­ரி­யர்­க­ளா­கப் பயிற்சி அளித்து வரு­கின்­ற­னர்.

நாணம்­மா­ளுக்கு 2016ல் மத்­திய அர­சின் 'நாரி சக்தி புரஸ்­கார்' விரு­தும் 2018ல் பத்­ம­ஸ்ரீ விரு­தும் வழங்­கப்­பட்­டது. வயது மூப்பு கார­ண­மாக 2019ல் தனது 99வது வய­தில் கால­மா­னார்.