ஒன்பது மாவட்டங்களிலும் மதுவிற்பனை செய்ய தடை

ஒன்பது மாவட்டங்களிலும் மதுவிற்பனை செய்ய தடை

1 mins read
00cec429-6f3f-4a29-9dc1-7115aa7ac0ef
-

சென்னை: அக்டோபர் 6, 9 ஆகிய இரு தேதிகளில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெற உள்­ளதை அடுத்து, மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் புதிய அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

முதல் கட்ட வாக்­குப்­ப­திவு நடை­பெ­றும் பகு­தி­களில் அக்­டோ­பர் 4ஆம் தேதி காலை 10 முதல் 6ஆம் தேதி நள்­ளி­ரவு 12 மணி வரை­யி­லும் 2ஆம் கட்ட வாக்­குப்­பதிவு நடை­பெ­றும் பகு­தி­களில் அக்­டோ­பர் 7ஆம் தேதி காலை 10 முதல் 9ஆம் தேதி நள்­ளி­ரவு 12 மணி­வரை­யி­லும் வாக்கு எண்­ணிக்கை நடை­பெறும் 12ஆம் தேதி அன்று வாக்கு எண்­ணிக்கை நடை­பெ­றும் பகு­தி­க­ளி­லும் 5 கி.மீ. சுற்­ற­ள­வில் உள்ள பகு­தி­க­ளி­லும் மதுக்­கூ­டம், மது­பா­னக் கடை­களைத் திறக்கக் கூடாது என அரசு உத்­தரவிட்­டு உள்­ளது.

விதி­மு­றை­களை மீறு­ப­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்கவும் காவல்­து­றை­யி­ன­ருக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.