சென்னை மேம்பட ரூ.500 கோடி ஒதுக்கீடு

சென்னை மேம்பட ரூ.500 கோடி ஒதுக்கீடு

2 mins read
0d6f1730-dbd8-4798-b3c3-d234cfda2b42
-

சென்னை: தலை­ந­கர் சென்னை யைச் சிங்­கா­ரச் சென்­னை­யாக உல­கத் தரத்­துக்கு இணை­யாக மேம்­ப­டுத்தி, அழ­கு­ப­டுத்­தும் வகை­யில், முதல்­கட்­ட­மாக ரூ.500 கோடி நிதியை ஒதுக்­கீடு செய்து மாநில அரசு அர­சாணை வெளி­யிட்­டுள்­ளது.

'சிங்­கா­ரச் சென்னை 2.0' திட்­டத்­திற்­கான வழி­காட்டு நெறி­மு­றை­களும் வெளி­வந்­துள்­ளன.

"சென்னை மாந­க­ராட்­சி­யு­டன் இணைக்­கப்­பட்ட 42 உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் கட்­ட­மைப்­பு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக தமி­ழக அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­துள்­ளது.

"பழ­மை­யான கட்­ட­டங்­கள், நகர்ப்­புற நில மேம்­பாடு, மருத்­து­வக் கட்­ட­மைப்­பு­களை மேம்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட பணி­கள் இந்த 'சிங்­கா­ரச் சென்னை 2.0' திட்­டத்­தின் கீழ் செயல்­பாட்­டுக்கு வர­வுள்­ளன.

"பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர்­மிகு சென்னை, நலம் மிகு சென்னை, கல்­வி­மிகு சென்னை உள்­ளிட்ட திட்­டங்­கள் வகுக்­கப்­பட்டு, சென்னை மேம்­பாடு காண உள்­ளது.

"தூய்மை சென்னை திட்­டத்­தின் கீழ், குப்­பை­கள் இல்­லாத, சுவ­ரொட்டி இல்­லாத சென்­னை­யாக மாற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

"பசுமை சென்னை திட்­டத்­தின் படி, நகர் முழு­வ­தும் பொது­மக்­கள் பங்­க­ளிப்­பு­டன் மரங்­கள் நடப்­படும்.

"நீர்­மிகு சென்னை திட்­டத்­தில் வீடு­தோ­றும் குடி­நீர் குழாய் இணைப்பு வழங்­கப்­படும். நீர்­நி­லை­கள், நீர்­வ­ழித்­த­டங்­கள் சீர­மைக்­கப்­படும்.

"எழில்­மிகு சென்னை திட்­டத்­தின் மூலம் ரிப்­பன் கட்­ட­டம், விக்­டோ­ரியா பொது மண்­ட­பம் உள்­ளிட்ட பாரம்­ப­ரிய கட்­ட­டங்­கள் நவீ­ன­ம­ய­மாக்­கப்­படும்.

"நல­மிகு சென்னை திட்­டத்­தின் கீழ் நவீ­ன­, சமு­தாய கழி­வ­றை­கள் அமைக்­கப்­படும். பாது­காப்­பான சென்­னை­யின்­கீழ் ஒவ்­வொரு 25 மீட்­ட­ருக்­கும் தெரு­வி­ளக்­கு­கள், பொது இடங்­களில் கண்­கா­ணிப்பு கேம­ராக்­க­ளைப் பொருத்­து­தல் ஆகி­யவை மேற்­கொள்­ளப்­படும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.