சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
"இன்று முதல் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்," என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி கீதா கூறியுள்ளார். சென்னையைப் பொறுத்த வரை நகரில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றார்.