ஸ்டாலின் பெருமிதம்: 505ல் இதுவரை 202ஐ சாதித்துவிட்டோம்

1 mins read
10f16666-f76d-4d34-9801-6ff92a015de6
முதல்வர் ஸ்டாலின். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் நடந்த சட்­ட­மன்றத் தேர்­த­லின்­போது பிர­சாரம் செய்த திமுக, மொத்­தம் 505 வாக்குறுதி­களை அளித்­த­தா­க­வும் அவற்­றில் 202 வாக்­கு­று­தி­கள் நிறை­வேற்­றப்­பட்டு உள்­ள­தா­க­வும் முதல்­வர் மு க ஸ்டா­லின் தெரி­வித்­தார்.

தர்­ம­புரி மாவட்­டம், மது­ரைக்­குச் சென்று பல்வேறு நலத் திட்டங்களை முதல்­வர் தொடங்கி வைக்­கி­றார்.

தர்மபுரி மாவட்­டம் வத்­தல்­ம­லை­யில் நடந்த அரசு விழா­வில் கலந்து கொண்டு பேசி­ய­போது முதல்வர் அவ்­வாறு கூறி­னார்.

தமிழ்நாட்டில் நடப்­பது மக்­கள் ஆட்சி என்­று தெரி­வித்த முதல்­வர், தமி­ழக மக­ளிர் சுய உத­விக் குழுக்­கள் விரைவில் பழைய கம்­பீ­ரத்­து­டன் மீண்­டெ­ழும் என்று உறுதி கூறி­னார்.

முதல்­வர், மதுரை பகு­தி­யில் இன்று பல்­வேறு நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­கி­றார்.