அரசு அலுவலகங்களில் அனல் பறக்கும் சோதனை; பணத்தை சன்னல் வழி வீசி எறிந்து தப்ப முயற்சி; அதிகாரிகள் சிக்கினர்

அரசு அலுவலகங்களில் அனல் பறக்கும் சோதனை; பணத்தை சன்னல் வழி வீசி எறிந்து தப்ப முயற்சி; அதிகாரிகள் சிக்கினர்

2 mins read
e98f7c34-9583-4f30-bf9d-6997bc2cbc4c
-

சென்னை: தமி­ழ­கம் எங்­கும் இயங்கும் அரசு அலு­வ­ல­கங்­களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதி­கா­ரி­கள் திடீர்­ சோ­தனை நடத்தி லட்­சம்­லட்ச­மாக பணத்­தைக் கைப்­பற்­றி­ய­தாகவும் அதி­கா­ரி­கள் பல­ரும் விசாரிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் தக­வல்­கள் வெளி­யா­யின.

லஞ்­சத்தை ஒழிக்­கும் நோக்கத்துடன் கடந்த மூன்று மாத கால­மாக பல அலு­வ­ல­கங்­களில் சோதனை நடப்­ப­தா­க­வும் அதன் உச்­ச­கட்­ட­மாக வியா­ழக்­கி­ழமை ஒரே நேரத்­தில் அதி­கா­ரி­கள் மாநிலத்­தின் பல பகு­தி­க­ளுக்­கும் படை­ எ­டுத்ததாக­வும் ஊட­கத் தகவல்­கள் குறிப்­பிட்­டன.

சென்னை திரு­வான்­மி­யூர், தாம்­ப­ரம், பெரும்­பு­தூர் வட்­டாரப் போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கங்­களில் அதி­கா­ரி­கள் படை நுழைந்­தது.

விழுப்­பு­ரம் டாஸ்­மாக் மண்­டல அலு­வ­ல­கம் மூன்று மணி நேரம் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.

அங்கு கணக்­கில் வராத ரூ.1.80 லட்­சம் பறி­மு­த­லா­னதை அடுத்து டாஸ்­மாக் கடை­க­ளுக்கு மது­பானம் அனுப்­பும் பணி நிறுத்தப்பட்டது.

மதுரை திரு­மங்­க­லம் வட்ட வழங்­கல் அலு­வ­ல­கத்­தில் ரூ.52,000 பணம் சிக்­கி­யதை அடுத்து அழகர்­சாமி, 58 என்ற அதி­காரி சிக்கிய தாகத் தெரிவிக்கப்பட்டது.

நாகர்­கோ­வில் வட்­டாரப் போக்கு­ வ­ரத்து அலு­வ­ல­கத்­தில் சோதனை நடந்­த­போது தர­கர்­கள் தப்பி ஓட முயன்­று கடைசி­யில் போலி­சி­டம் பிடிபட்­ட­னர்.

சன்­னல்­க­ளுக்கு வெளியே தரகர்­களும் அலு­வ­லர்­களும் வீசி எறிந்த பணம், ஆர்சி புத்­த­கம் போன்­றவை பறி­மு­தல் செய்­யப்­பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கணக்­கில் வராத ரூ.118,950 பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. வட்­டாரப் போக்­கு­வ­ரத்து அதி­காரி சந்­தி­ர­சே­கர் மற்­றும் தர­கர்­கள் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டது.

சாத்­தூர் வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கம், திருச்சி மாவட்­டம் மணப்­பாறை மாகா­ளிப்­பட்­டி­யில் உள்ள வட்­டாரப் போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கம், நாகப்­பட்­டி­னம் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் செயல்­படும் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்கு­நர் அலு­வ­ல­கம் ஆகி­ய­வையும் தப்­ப­வில்லை.

அறந்­தாங்கி சார்­ப­தி­வா­ளர் அலு­வ­ல­கம், சிதம்­ப­ரத்­தில் மாவட்ட கல்வி அலு­வ­ல­கம், கர்­நா­டக எல்லையை ஒட்டி ஓசூர் ஜுஜு­வாடி­யில் உள்ள ஆர்­டிஓ உள்­வழி சோதனைச்­சா­வடியிலும் சோதனை நடந்தது.

தர்ம­புரி மாவட்­டம் அரூர் பேரூராட்சி அலு­வ­ல­கம், மோட்­டார் வாகன ஆய்­வா­ளர் அலு­வ­ல­கம், நாமக்­கல் மாவட்­டம் பள்­ளி­ப்பா­ளை­யம் சில்­லாங்­காட்­டில் உள்ள மோட்டார் வாகன ஆய்­வாளர் அலு­வலகம் ஆகி­ய­வற்­றில்­ அ­தி­கா­ரி­கள் நடத்­திய சோத­னை­களில் லட்­சக் கணக்­கில் பணம் பறி­மு­தல் செய்­யப்­பட்டதை அடுத்து விசா­ரணை முழு மூச்­சில் நடப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.