தாயைக் கொன்ற 25 வயது மகனுக்கு தூக்குத் தண்டனை

புதுக்­கோட்டை: சொத்­துப் பிரச்­சினை கார­ண­மாக தாயைக் கொன்ற மக­னுக்­குத் தூக்­குத் தண்­டனை விதித்து புதுக்­கோட்டை மகளிர் நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது.

பெற்ற தாயையே ஈவு, இரக்க மில்­லா­மல் கொலை செய்த குற்­றத் துக்­காக குற்­ற­வா­ளிக்குத் தூக்­குத் தண்­ட­னை­யும் ரூ.50,000 அப­ரா­த­மும் விதிப்­ப­தாக நீதி­பதி ஆர். சத்­தியா வெள்­ளி­யன்று மாலை தீர்ப்பை வாசித்­த­போது கூறி­னார்.

இத­னை­ய­டுத்து, குற்­ற­வாளி ஆனந்த்தை திருச்சி மத்­திய சிறை­யில் போலிசார் அடைத்தனர்.

புதுக்­கோட்டை மாவட்­டம், மழை யூர் அருகே உள்ள மற­வம்­பட்­டி­யைச் சேர்ந்த தங்­க­ராசு-தில­க­ராணி தம்­ப­தி­ய­ரின் மகன் ஆனந்த், 25.

இவர், கடந்த 2018ல் மற­வன்­பட்டி பேருந்து நிறுத்­தத்­தில் வைத்து தனது தாய் தில­க­ரா­ணியை, 45, வெட்­டிக்­கொன்­றார்.

இக்­கொலை தொடா்பாக தில­க­ரா­ணி­யின் தாய் லட்­சுமி, 68, மழையூா் காவல்நிலை­யத்­தில் புகாா் அளித்­ததை அடுத்து ஆனந்த் கைதா­னார்.

இந்த வழக்கு விசா­ர­ணை­யின் நிறை­வில், ஆனந்த்­துக்கு தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த 2008ஆம் ஆண்டு தனது கணவா் தங்­க­ரா­ஜுவை தில­க­ராணி கொன்­ற­தாக மாவட்ட கூடு­தல் நீதி­ மன்­றத்­தில் வழக்கு விசாரணை நடை­பெற்று, குற்­றம் நிரூ­பிக்­கப்­படா­மல் வழக்­கில் இருந்து தில­க­ராணி விடு­தலையானார்.

நடந்த சம்பவம் குறித்து போலி­சா­ரி­டம் ஆனந்த் அளித்துள்ள வாக்குமூலத்தில், "தந்தை தங்­க­ரா­சுவை தில­க­ராணி கொலை செய்­த­போது எனக்கு 12 வயது. தந்­தை­யின் குடும்ப சொத்தை எங்­க­ளுக்குக் கொடுக்க விரும்பாமல் தில­க­ரா­ணியே அனு­ப­விக்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­தார். இத­னால் தாயின் மீது வெறுப்பு ஏற்­பட்­டது. அத்துடன், தந்­தை­யை­யும் அவா்தான் கொன்றாா் என்ற எண்­ண­மும் என்­னுள் இருந்­த­தால் எனது தாயை வெட்­டிக் கொன்­றேன்," என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!